பாகுபலியின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்
விக்ரம், ஜெயராமன், கார்த்திக், ஜெயம்ரவி, திரிஷா, ஜஸ்வர்யாராய், சரத்குமார், பார்த்தீபன், பிரபு, விக்ரம் பிரபு, போன்ற பல நடிகர்களை வைத்து,லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தின் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான், திரைப்படத்திற்கே வராதவர்கள் கூட ஆர்வமுடன் ,இத் திரைப்படத்திற்கு திரளாக வந்து பார்வையிட்டு உள்ளனர். தமிழகத்தில் 158 கோடி கடந்த 9 நாட்களில் வசூல் செய்திருந்தது, (பாகுபலி 153 கோடி தான்) பாகுபலியின் வசூலை மிஞ்சி சாதனை படைத்துள்ளது பொன்னியின் செல்வன். மேலும் பல சாதனைகள் படைக்கப் போகும், பொன்னியின் செல்வனை பொறுத்திருந்து பார்க்கலாம். அமரர் கல்கி(சதாசிவம்). எழுதியிருந்த பொன்னியின் செல்வனின் மஹிமை, அதைப் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். திரைப்படமாக்க முயற்சி செய்து, வெற்றி கண்ட டைரக்டர் மணிரத்தினத்தை பாராட்டியே ஆக வேண்டும். இப் படத்தின் மூலம் தமிழகத்தின் கல்கியின் புகழ் உலகெங்கும் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
0
Leave a Reply