ரூ.67500 கோடி சொத்துக்களை உருவாக்கிய பிபி ரெட்டி
கட்டுமான தொழிலதிபரான பிபி ரெட்டி இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர். அடிப்படையில் அவர் ஒரு இன்ஜினியர். அவரது சொத்து மதிப்பு ரூ.16,591 கோடி என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டின் 360 வெல்த் ஹுருண்இந்தியபணக்காரர்கள்பட்டியலில்பிபிரெட்டிஇடம்பிடித்துள்ளார்.பிபி ரெட்டி ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் குடும்பத்தில் அவர் ஐந்தாவது பிள்ளை.ரெட்டியின் குடும்பத்துக்கு எந்தவிதமான வணிகத் தொடர்புகளும் இல்லை. இருந்தாலும், 1989 ஆம் ஆண்டில், ரெட்டி வித்தியாசமான முயற்சியில் ஈடுபட முடிவு செய்தார்.இரண்டு ஊழியர்களுடன் மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.கடந்த 34 ஆண்டுகளில், ரெட்டியின் நிறுவனம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் பணக்கார வணிக அதிபர்களில் பிபி ரெட்டியின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13, 2024 நிலவரப்படி, மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.67,500 கோடியாக உள்ளது. இது அவரது 34 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். 2023 இல், அவரது நிறுவனத்தின் வளர்ச்சி 22.1 சதவீதமாக இருந்தது.சிறிய குழாய்களில் தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய லிப்ட் நீர்ப்பாசன திட்டத்தை உருவாக்கியது. முதலில் சிறிய குழாய்களை உருவாக்கிய ரெட்டியின் நிறுவனம், சாலைகள், அணைகள் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக வலையமைப்புகள் மற்றும் லிஃப்ட் பாசனத் திட்டங்களை உருவாக்கியது. பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிர்மாணிப்பதில் அவரது நிறுவனம் தன்னை ஒரு முக்கிய பங்காளியாக நிலைப்படுத்தியது.
பிபி ரெட்டியின் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய லிப்ட் பாசனத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் தெலுங்கானாவில் கல்லேஸ்வரம் லிப்ட் இரிகேஷன் திட்டத்தை $14 பில்லியன் செலவில் கட்டி அமைத்தது. கோதாவரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 18.26 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிபி ரெட்டி கல்லேஸ்வரம் திட்டத்தை 'நதியின் விரிவாக்கம்' என்று விவரிக்கிறார்.ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆடம்பர மாளிகையில் வசித்து வருகிறார். இது வைர மாளிகை என்று அழைக்கப்படுகிறது.\உண்மையிலேயே அந்த மாளிகை ஒரு வைரம் போலவே ஜொலிக்கிறது. ரெட்டிக்கு அந்த மாளிகையில் ஒரு கோல்ஃப் மைதானமும் உள்ளது.
0
Leave a Reply