பாரத பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் ராபி பருவத்தில் விவசாயம் செய்யும் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 30.11.2024. பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ.316/- எனவும், கம்பு பயிருக்கு ரூ.160/- எனவும், துவரை பயிருக்கு ரூ.228/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.441/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு பயிர் காப்பீடு நடைபெற்று வருகிறது.எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply