மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவில் நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். விருதுநகர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவானது 12.12.2024 விருதுநகரில் உள்ள விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார் நாடார் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது.
நேரு யுவ கேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் வெகு சிறப்பாக விருதுநகர்; மாவட்டத்தில் இந்த விழாவானது நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும். இந்த வாய்ப்பை விருதுநகர்; மாவட்ட இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நடைபெறும் போட்டிகள்.
1) அறிவியல் கண்காட்சி -தனிநபர் போட்டி (முதல் பரிசு ரூ. 3000, 2-ம் பரிசு ரூ.2000, 3-ம் பரிசு ரூ.1500)
2) அறிவியல் கண்காட்சி-குழுப் போட்டி (முதல் பரிசு ரூ.7000, 2-ம் பரிசு ரூ.5000, 3-ம் பரிசு ரூ.3000)
3) இளம் எழுத்தாளர் போட்டி - கவிதை போட்டியும்,
4) இளம் கலைஞர் போட்டி - ஓவியம் போட்டியும்,
5) கைப்பேசி புகைப்பட போட்டி (வரிசை எண் 3 முதல் 5 வரை உள்ள போட்டிகளுக்கு (முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.2500, 3-ம் பரிசு ரூ.1500)
6) கலைத்திருவிழா - குழு நடனப்போட்டி (முதல் பரிசு ரூ.7000, 2-ம் பரிசு ரூ.5000,3-ம் பரிசுரூ. 3000).
தகுதிகள் - வயது 15 முதல் 29 வரை (அதாவது 30.09.2024 தேதியின் படி 15 வயது) போட்டியில் பங்கு பெறுபவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
கலைப்போட்டிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியடைவர். முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான முன்பதிவிற்கு னலக2024.dyf2024.virudhunagar@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் 10.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டி நடைபெறும் நாளன்று போட்டியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட விபரத்துடன், தங்களுடைய ஆதார், பிறப்பு சான்றிதழ், பள்ளிகல்லுரியை சார்ந்தவர்கள் பிறந்த தேதி குறிப்பிட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) பள்ளி தலைமையாசிரியர்/கல்லூரி முதல்வர்களிடம் பெற்று சமர்பிக்கப்பட வேண்டும்.
மேலும் தகவலுக்கு நேரு யுவ கேந்திரா அலுவகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், குமாரசாமி ராஜா நகர், விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94894-62140, 04562-252770, தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply