கன்ஃபார்ம் சீட் குறித்து ரயில்வேயின் மிகப்பெரிய அப்டேட்.
ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்கேற்பIRCTC பல விதிகளை செய்து தருகிறது. தற்போது கன்ஃபார்ம் சீட் குறித்து ரயில்வே மிகப் பெரிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது.அந்தவகையில் இந்திய ரயில்வே தற்போது புதிய விதி ஒன்று அமலுக்கு கொண்டு வந்துள்ளது .இந்நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை இருந்தும் உங்களால் ரயிலைப் பிடிக்க முடியாவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் ?என்கிற குழப்பம் பலரது மனதில் முக்கிய கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய ரயில்வே (IRCTC)இதுதொடர்பாகஎன்னகூறுகிறது.ரயில்வேயில்பலவிதிகள்பின்பற்றப்படாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகள் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி அதில் ஒன்று தான் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான விதிகள் ஆகும்.
ரயிலில் உங்கள் இருக்கை உறுதி செய்யப்பட்டு, சில காரணங்களால் நீங்கள் ரயிலைத் தவறவிட்டுவிடுகிறீர்கள் என்றால் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை முன்பதிவு செய்ய ஒரு விதி உள்ளது. ரயிலைத் தவறவிட்ட பிறகு, தங்கள் இருக்கைகளையும் இழக்க நேரிடும் என்று பயணிகள் நினைக்கிறார்கள், ஆனால் அப்படி இல்லை.உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை பயணியின் பெயரில் ,பயணத்தின்அடுத்த இரண்டு நிலையங்கள் வரை ரயிலில் இருக்கைகள் முன்பதிவு இருக்கும். அதாவது, நீங்கள் விரும்பினால், அடுத்த நிலையத்திற்கு சென்று ரயிலைப் பிடிக்க முயற்சிக்கலாம். இரண்டு நிலையங்களையும் நீங்கள் தவறினால்TTE உங்கள் இருக்கையை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடலாம்.
பொதுவாக ரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமும் நேரடியாக ரயில்வே கவுண்டரிலும் புக்கிங் செய்யலாம். ஆனால் இப்படியாகத் தேதியை மாற்ற ரயில்வே கவுண்டரில் மட்டுமே வழி இருக்கிறது. ஆன்லைனில் இதைச் செய்ய முடியாது. நீங்கள் புக்கிங் செய்த டிக்கெட் உடன் ரயில்வே கவுன்டருக்கு சென்று புக்கிங் செய்த தேதியிலிருந்து முன்னரே பின்னரோ மாற்றம் செய்து கொள்ளலாம். இது
ரயில் கிளம்புவதற்கு48 மணி நேரத்திற்கு முன்னர் வரை செய்து கொள்ள அனுமதியிருக்கிறது. அதன் பிறகு மாற்ற முடியாது. இந்த வாய்ப்பை ஒரு முறை மட்டுமே செய்து கொள்ள முடியும்.
0
Leave a Reply