25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்  பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்  பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு .

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்  பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு  (11.06.2026) பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் திரு  M.B. சந்திரன் ராஜா அவர்கள் தலைமை வகிக்க,  பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ஆனந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனந்தி அவர்கள் மாணவர்களை பாராட்டி பேசினார்.

தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பன்னிரெண்டாம் வகுப்பில்  மாணவர் G. வெங்கடேஸ்வரன் 576/600 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் கணினி அறிவியலில் 100/100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாணவர்  I. கெவின் ஆண்டர்சன் 566/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் கணிதத்தில் 99 /100  மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவர் M. அருண்குமார்  558/600  மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் வேதியலில் 98/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் மாணவி J.M. அர்ச்சனா ஸ்ரீநிதி கணினி அறிவியலில் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

பத்தாம் வகுப்பில் மாணவர் M. தருண்குமார் 489/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும் மாணவி M. அனுஜா 482/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் M. சுதர்சனா மற்றும் M. அகல்யா 476/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 

முதலிடம் பெற்றுள்ள M. தருண்குமார் 

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்று  சாதனை படைத்துள்ளார். 

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர்,      நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,    முதல்வர், நிர்வாக அலுவலர் திரு. வெங்கட பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி சிறப்பு செய்தனர்.

ஆசிரியை திருமதி. அழகுராணி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

 விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News