தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ரோகித் கிருஷ்ணா இந்தியாவின் புதிய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
நேற்று 7 வது சுற்று போட்டி சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் ,மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், நெதர்லாந்தின்அனிஷ் கிரி மோதினர். இப்போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் நிஹால் சரின், அமெரிக்காவின் ராய் ராப்சனை சந்தித்தார். நிஹால், 43 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ரோகித் கிருஷ்ணா 20 , இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில் 9 சுற்றில் 6.5 புள்ளி எடுத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றில் 5.5 புள்ளி எடுக்க, இரண்டாவது அந்தஸ்தை அடைந்தார்.
கஜகஸ்தானில் அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வ தேச செஸ் தொடரில் பங்கேற்ற, ரோகித் கிருஷ்ணா கடைசி சுற்றில் (9 வது) ஆர்மேனியா வின் ஆர்தர் தவ்த் யனை வென்றார்.6.0 புள்ளி எடுத்து 8வது இடம் பிடித்தார். தவிர, 'பிடே' தரவரிசையில் 15.1 புள்ளி பெற்றார். இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மொத்தம் 2500 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்ட, மூன்றாவது அந்தஸ்தை அடைந்தார். தற்போது இந்தியாவின் 89 வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இந்தியாவின் ஆதித்யா, இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு 9 சுற்றில் 5 வெற்றி, 5 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply