தொழிலாளர் நல நிதியினை 30.12.2026-இக்குள் தொழிலாளர் நலவாரியத்திற்கு நிறுவனங்கள் செலுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள் கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் பங்கு ரூ.20/- மற்றும் நிறுவனத்தின் பங்கு ரூ.40/-ஆக மொத்தம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60/- என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு 2026-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.01.2027-க்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு வாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகை - மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, கல்வி ஊக்கத் தொகை, பாடநூல் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, மூக்குக் கண்ணாடி உதவித் தொகை, தையல் இயந்திர உதவித் தொகை, அடிப்படை கணினி பயிற்சி உதவித் தொகை, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு உதவித் தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவித் தொகையினைப் பெற தொழிலாளரின் மாத ஊதியம் (Pay. DA) ரூ.35,000/-க்குள் இருக்க வேண்டும்.
2026-27ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை மாவட்ட அளவில் முதல் 10 இடங்களுக்குள் வரும் மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.lwb.tn.gov.in என்ற தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ”செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-06” என்ற முகவரிக்கு 31.12.2026-க்குள் நேரிடையாகவோ அல்லது தபாலிலோ கிடைக்கும்படியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply