இறைப்புத்திறன் குறைந்த பழைய மின் இறைப்பான்களுக்கு பதிலாக புதிய மின் இறைப்பான்கள் மற்றும் புதியதாக மின் இறைப்பான்கள் மாற்ற விரும்பும் சிறு/குறு விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில், 2026-27-ஆம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக இறைப்புத்திறன் குறைந்த பழைய மின் இறைப்பான்களுக்கு பதிலாக புதிய மின் இறைப்பான்கள் மற்றும் புதியதாக மின் இறைப்பான்கள் நிறுவ விரும்பும் சிறு/குறு விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் அதிகபட்சம் ரூ.15,000/- (பதினைந்தாயிரம் மட்டும்) வீதம் 25 எண்களுக்கு ரூ.3.75 இலட்சம் (மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக வழங்கப்படவுள்ளது. மானியம் கணக்கிடும் போது மாற்றப்படும் மின் இறைப்பானின் அங்கீகரிக்கப்பட்ட விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.15000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கவுள்ள விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர்(வே.பொ) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மின் மோட்டார் நிறுவனங்கள் மற்றும் வகையின் விபரத்தினை அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகியோ, வட்டார பொறியாளர்களை தொடர்பு கொண்டோ, அவ்வகை இறைப்பான்களை வாங்கி மானியம் பெற்று பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பட்டா, அடங்கல், புல வரைபடம் (கிணறு/போர் குறிப்பிடப்படவேண்டும்), ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், சொட்டு நீர்/தெளிப்பு நீர் பாசன பதிவு விபரம், சிறு/குறு விவசாயி சான்றிதழ், வங்கி புத்தகத்தின் முன் பக்க நகல் ஆகும்.
மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் ஐ (8838825538) யும் திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, திருவில்லிபுத்தூர் (9786390851)ஆகியோரை தொடர்பு கொண்டோ பதிவு செய்து முன்னுரிமைப்படி பின்னேற்பு மானியம் பெற்று பயனடைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.திரு.என்.ஓ.சுகபுத்ரா I A S. அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
0
Leave a Reply