விருதுநகர் மாவட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்டம்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் எஸ்.எப்.எஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட இசை பயிற்சி முகாமினையும்,
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 50 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் (02.05.2024) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அவ்வையாரின் பாடலுக்கு ஏற்ப தனக்கு விருப்பமான ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் அந்த செயலில் திறமை வாய்ந்தவராக உருவாக முடிகிறது.
தூக்கணாங்குருவி கூடு, தேன்கூடு, கரையான் புற்று உள்ளிட்ட சிறிய உயிரினத்தின் கூடுகள் தனிச்சிறப்பானவை. ஒவ்வொரு சிறிய உயிரினங்கள் முதல் பெரிய உயிரினங்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பண்புகள் உள்ளன. அது போல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்திறமைகள் உள்ளன. அதனடிப்படையில், மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர்கின்ற வகையில், இந்த கோடைகால பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவ, மாணவிகள், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்எனமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply