வாசனை திரவியங்கள்
மனதை மயக்கும் இனிமையான நறுமணம் ஒரு இடத்தில் பரவும் போது மனதில் இனம் புரியாத மலர்ச்சியை உருவாக்கு கிறது. இதன் காரணமாகவே ஆதி காலத்தில் இருந்து மனித இனம் சென்ட் என்ற வாசனை திரவியங்களை பயன்படுத்தி வந்துள்ளது. வாசனை திரவியம் தயாரிக்கும் கலை பண்டைய எகிப்து, மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் சீனாவில் தோன்றியது. பின்னர் ரோமானியர்கள், அரபு மற்றும் பாரசீக வேதியியலாளர்களால் மேம்படுத்தப்பட்டது.
தொடக்க காலங்களில் தாவரங்கள், மலர்களில் இருந்து பெறப்பட்ட சாறுகளை வடிகட்டி எரிசாராயத்தில் மூழ்க வைத்து நறுமண திரவியங்களை உருவாக்கினர். ஐரோப்பிய தோல் பதனிடும் தொழில் தான் வாசனை திரவிய தயாரிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் தோல் பதனிடும் போது வெளிப்படும் அழுகிய, விரும்பத்தகாத மணத்தை குறைக்க வாசனை திரவியங்களை தெளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனை உணர்ந்து கொண்ட தோல் பதனிடும் நிறுவனம் முதன் முதலாக தாங்கள் தயாரித்த தோல் கையுறைகளில் திரவ வாசனை எண்ணெய்களை கொண்டு பதனிட்டுகையுறைகளை விற்பனை செய்தனர்.
தோல் வாடை எதுவும் இல்லாமல் கமகமக்கும் தாவர எண்ணெய் வாசனை கொண்ட அந்த கையுறைகள் வெகுவாக விற்பனை செய்யப்பட்டன. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரெஞ்சு புரட்சி மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட போர்கள், அடுத்து ஐரோப்பிய வாசனை திரவியங்கள் வணிகமயமாக வழிவகுத்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு நாடுகளும் விதவிதமான நறுமண திரவியங்களை உருவாக்கின. இன்று, வாசனை திரவியங்கள் கோடிக்கணக்கான மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கிறது.
0
Leave a Reply