பள்ளி ஆட்டோக்கள் மீது கடும் கட்டுப்பாடு.முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அளவுக்கு மீறி குழந்தைகள் பயணம் செய்வது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
சில ஆட்டோக்களில் 10 முதல் 13 மாணவர்கள் வரை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லப்படுவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply