உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வு- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம்.
இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.
ஆலோசனை அலுவலக அறை கைப்பேசி எண்கள் :-
1) 8072918467
2) 7598510114
3) 8838945343
4) 9597069842
ஒன்றியம் வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் :-
1) அருப்புக்கோட்டை - 8754271045
2) காரியாபட்டி - 9789560011
3) நரிக்குடி - 9488501938
4) இராஜபாளையம் - 9788396946
5) சாத்தூர் - 7010762308
6) சிவகாசி - 9500205414
7) திருவில்லிபுத்தூர் - 8220846444
8) திருச்சுழி - 9944762424
9) வெம்பக்கோட்டை - 9443669462
10) விருதுநகர் - 9488988222
0
Leave a Reply