பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிக்க தயாராக இருக்கும் சுமித் அன்டில், மாரியப்பன்
ஹரியானாவை சேர்ந்தவர் சுமித் அன்டில், 26 -இளம் பருவத்தில் மல்யுத்தம், இந்திய ராணுவத்தில் சேர விரும்பினார். இவரது 17-வது வயதில் விதி விளையாடியது டீயூஷன் முடித்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது, வேகமாக வந்த டிரக் மோதியது. விபத்தில் காயமடைந்த இவரது இடது காலின் கீழ் பகுதி அகற்றப்பட, மல்யுத்த கனவு தகர்ந்தது. பின் மனம் தளராமல் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் களமிறங்கினார். விரைவில் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க துவங்கினார். தங்கப்பதக்கங்களை குவித்தார்.
கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் ( 2021 ) 68..55 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 2023-ல் ஹாங்சுவில் கடந்த பாரா ஆசிய விளையாட்டில் 73.29 மீட்டர் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். பாரிஸ் பாராலிம்பிக்கிலும் சாதிக்க காத்திருக்கிறார்.
சுமித் அன்டில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு 2021 கொரோனா கட்டுப்பாடு காரணமாக தாமதமாக சென்று ., துவக்க விழாவை மிஸ் செய்தார். இம்முறை இந்திய கொடியை ஏந்தி செல்ல இருப்பதை பெரிய கவுரவமாக கருதுகிறார்.
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் (ரியோ 2016) வெள்ளி (டோக்கியோ 2021) என இரு பதக்கமும் வென்றவர் தமிழகத்தின் மாரியப்பன், சமீபத்தில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் கைப்பற்றினார். தற்போது மூன்றாவது முறையாக பாரிசில் களமிறங்கும் மாரியப்பன் பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லலாம்.. பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
0
Leave a Reply