சர்வதேச பாட்மின்டன் தொடரில் தான்யா ஹேம்நாத் சாம்பியன் .
சர்வதேச பாட்மின்டன் தொடர் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள சாய்பன் நகரில் நடந்தது. உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் சோதனை முயற்சியாக, 21க்குப் பதில், 15 புள்ளி கொண்ட செட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் தான்யா ஹேம்நாத், அரையிறுதியில் ஜப்பானின் ரிரினா ஹிராமோட்டோவை வென்றார்.
பைனலில் தான்யா 21, மற்றொரு ஜப்பான் வீராங்கனை கனே சகாயை எதிர்கொண்டார். முதல் செட்டை 15-10 கைப்பற்றி ,அடுத்த செட்டையும் 15-8 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் தான்யா 15-10, 15-8 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.
0
Leave a Reply