டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981- ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 ( புதன் ) அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2,F.L-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981- ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply