சென்னை நிறுவனத்தை வாங்கும் டாடா.
டாடா சன்ஸ் சேர்மன் என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் வரலாறு காணாத வகையில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இக்குழுமத்தின் புதிய குரோத் இன்ஜினாக உருவெடுத்திருக்கும் ஐபோன் தயாரிப்பு பிரிவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல சென்னை நிறுவனத்தை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் பிரம்மாண்ட தொழிற்சாலையில் ஐபோன் அசம்பளி தளத்தை உருவாக்கி, நாட்டின் ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.இந்த நிலையில் பெங்களூரில் சமீபத்தில் விஸ்திரான் தொழிற்சாலையை மொத்தமாகக் கைப்பற்றிய நாட்டின் முதல் ஐபோன் தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்டமாகச் சென்னையில் உள்ள பெகாட்ரான் தொழிற்சாலையைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது டாடா குழுமம்.டாடா குழுமத்திற்கு தனது ஒரே ஐபோன் உற்பத்தி ஆலையின் கட்டுப்பாட்டை ஒப்படைப்பது குறித்த பேச்சுவார்த்தையை பெகாட்ரான் நிறுவனம் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டின் நிறுவனமான பெகாட்ரான், ஆப்பிள் நிறுவனத்துடனான தனது கூட்டணியில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்புதலுடன் இந்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் வேளையில், சென்னை அருகே இயங்கி வரும் பெகாட்ரான் ஆலையை இயக்க டாடா குழுமத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகவும்...இந்த கூட்டணி நிறுவனத்தில் குறைந்தபட்சம்65% பங்குகளை டாடா குழுமம் வைத்திருக்கும் என்றும், மீதமுள்ள பங்குகளை பெகாட்ரான் நிறுவனம் வைத்திருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஸ்திரான் நிறுவனத்தை கைப்பற்றிய டாடா தற்போது பெகாட்ரான் நிறுவனத்தையும் கைப்பற்ற உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் ஒன்றான டாடா குழுமம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு மூலமாக இந்த கூட்டு நிறுவனத்தை இயக்கும் என்று தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் பாக்ஸ்கான்- டாடா மட்டுமே இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும்.சுமார்10,000 ஊழியர்களைக் கொண்ட இந்த சென்னை பெகாட்ரான் தொழிற்சாலை, ஆண்டுதோறும்5 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. சீனாவில் இருந்த தனது ஐபோன் உற்பத்தி ஆலையின் கட்டுப்பாட்டைக் கடந்த ஆண்டு தனது சகபோட்டி நிறுவனமானLuxshareக்கு290 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்த நிலையில், பெகாட்ரன் இயங்கி வந்த கடைசி ஆலை இதுவாகும்.
இந்த ஒப்பந்தம், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான டாடா குழுமத்தின் திட்டங்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி மாற்றத்தின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. சீனாவிற்கு வெளியே தனது உற்பத்தி தளத்தை விரிவுபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.பெகாட்ரான் கைப்பற்றல் மூலம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்தால் டாடா குழுமம் தனது வருவாயை அதிகரித்துக்கொள்ளவும், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். அதே நேரத்தில், சீனாவை அதிகம் சார்ந்திருந்திருக்கும் நிலை மாறும்.
0
Leave a Reply