25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


21 -வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

21 -வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் நகராட்சி 30-வது வார்டில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை (25.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், 21-வது கால்நடை கணக்கெடுப்பு -2024 அறிவுரைக் கையேட்டினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார்.

                 இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது.  2019-ம் ஆண்டு 20-வது கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தற்போது 2024-ம் ஆண்டில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த 21-வது கால்நடை கணக்கெடுப்பானது அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராமவாரியாகவும், மற்றும் நகர்புறங்களில் வார்டு வாரியாகவும் கால்நடை கணக்கெடுப்பு நடைபெறும். கால்நடைகள் இருக்கின்ற மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் கோசாலைகளில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்படும்.

இந்த பணியினை மேற்கொள்ள 207 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 46 மேற்பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு கால்நடை கணக்கெடுப்பை நடத்துவதற்காக புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட மொபைல் மற்றும் இணையதள பயன்பாடுகள் குறித்து நேர்முக மற்றும் கள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பில் கால்நடை  வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண் அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கிய தொழில், கல்வித் தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது,பாலினம் அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு விரைவாக நடத்தபடவுள்ளதால், உங்கள் வீடு தேடி வரும் கால்நடை மற்றும் புள்ளி விவர அலுவலர்களிடம் தக்க ஒத்துழைப்பு அளித்து கால்நடைகள் குறித்த  உரிய விவரங்களையும் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.தியோ பிளஸ் ரோஜா, உதவி இயக்குநர்மரு.வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News