25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  சார்பில், 23.09.2025 முதல் 29.09.2025 வரை சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக 23.09.2025 முதல் 29.09.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசு சேவைகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி, சிறப்பு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

 மேலும், 23.09.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக  சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் வரை  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

 இப்பேரணியில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், செவித்திறன் குறையுடைய பள்ளிக் குழந்தைகள், செவித்திறன் குறையுடைய சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரிதிநிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டு பதாகைகளை ஏந்திவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News