25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யூத் தடகளத்தில் தேசிய சாதனை – தமிழக வீரர் நீல் சாம்ராஜ் அசத்தல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் தடகளத்தில் தேசிய சாதனை – தமிழக வீரர் நீல் சாம்ராஜ் அசத்தல்!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கின. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த மூன்று நாள் தொடரில், தமிழகம் சார்பில் 21 வீரர்கள் மற்றும் 16 வீராங்கனைகள் என மொத்தம் 37 பேர் பங்கேற்கின்றனர்.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் நீல் சாம்ராஜ், 10.46 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் யூத் தடகளப் பிரிவில் புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.

இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு அன்ஷு ராஜ் 10.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் மிர்த்திகா, 11.78 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தத் தொடரின் புதிய சாதனையாக அமைந்தது.

பெண்களுக்கான 400 மீட்டர் அரையிறுதி முதல் பிரிவில் தமிழக வீராங்கனை சகாய ஜெமிமா, 55.94 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து மூன்றாவது இடம் பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News