தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-2/2அ பணியிடங்களுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் சூலக்கரை கே.வி.எஸ்.பள்ளி மற்றும் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-2/2அ பணியிடங்களுக்கான தேர்வுகளை (01.11.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-2/2அ பணியிடங்களுக்கான தேர்வுகள் 55 மையங்களில் நடைபெற்றது.இத்தேர்வு மையங்களில் மொத்தம் 16,829 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 13,957 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். 2,872 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. அதன்படி,விருதுநகர் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 3,222 தேர்வர்களில் 2,649 தேர்வர்கள் வருகை புரிந்து, 573 பேர் வருகை புரியவில்லை.
அருப்புக்கோட்டை வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 3,257 தேர்வர்களில் 2,750 தேர்வர்கள் வருகை புரிந்து, 507 பேர் வருகை புரியவில்லை.இராஜபாளையம் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 3,153 தேர்வர்களில் 2,618 தேர்வர்கள் வருகை புரிந்து, 535 பேர் வருகை புரியவில்லை.சாத்தூர் வட்டத்தில் 5 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 1,491 தேர்வர்களில் 1,252 தேர்வர்கள் வருகை புரிந்து, 239 பேர் வருகை புரியவில்லை.சிவகாசி வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 2,884 தேர்வர்களில் 2,358 தேர்வர்கள் வருகை புரிந்து, 526 பேர் வருகை புரியவில்லை.
திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 2,822 தேர்வர்களில் 2,330 தேர்வர்கள் வருகை புரிந்து, 492 பேர் வருகை புரியவில்லை.தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன என மாவட்ட ஆட்சித்தலைவர் ,அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply