108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.06.2024) அன்று விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மொத்தம் 25 அவரச ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 இலவச அவசர சிகிச்சை ஊர்திகள் பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவைகளில் சுமார் 125 நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த பணிகளில் முழுமையாக செயல்பட்டு விரைந்து சென்று, சரியான சிகிச்சை அளித்து அதிக உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கடந்த வருடம் சிறப்பாக பணியாற்றிய ஊர்தி ஓட்டுநர் திரு.தங்கச்சாமி என்பவருக்கும், மருத்துவ உதவியாளர் திருமதி அருணா என்பவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பாபுஜி, மாவட்ட 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கருப்பசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
0
Leave a Reply