திருச்சுழி வட்டாரப்பகுதிகளில் அரசின் பல்வேறுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
விருதுநகர்மாவட்டம்,திருச்சுழிவட்டாரப்பகுதிகளில்அரசின்பல்வேறுத்துறைகள்மூலம்செயல்படுத்தப்பட்டுவரும்நலத்திட்டங்களை(30.12.2025)செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.அதன்படி, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மசாலா தயாரிப்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உற்பத்தி பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டி மானியத்தில் வாங்கப்பட்ட சரக்கு வாகனத்தினையும், திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சென்னிலைகுடி ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் 2023-2024-ம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, புதிய வீடுகளை பார்வையிட்டார்.இந்த செய்தியாளர் பயணத்தின் போது திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply