பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி சி.இ.நா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (19.09.2026) ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை 22.09.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, சிவகாசி வட்டம் சி.இ.நா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள், உணவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதி, உணவு பரிமாறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் உரிய காலக்கெடுவிற்குள் முழுமையாக நிறைவு செய்து, மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தரமான காலை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
0
Leave a Reply