56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு!
ராஜபாளையத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் தொடங்கிய மழை, இரவு 10 மணி வரை நீடித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகர், புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் செண்பகத்தோப்பு பேயனாற்று ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
0
Leave a Reply