25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம்

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்படுகின்றனர். சத்திரப்பட்டி, அய்யனாபுரம், கீழ ராஜகுலராமன், கோபாலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குளம், கிழவி குளம், தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது.

இதனால் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்தனர். கடைவீதிகள், முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் பெரி தும் அவதிப்பட்டனர். ஒரு சில பகுதிகளில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் கம்பங்கூழ், இளநீர், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பான கடைகளை நாடி சென்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் நிழலகம், பஸ் நிலையம், கடைவீதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News