வாழ்வின் பெருமை மிக்க தருணமாக இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர், பெண்கள் அணியின் நிர்மலாசுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள் கருதுகின்றனர்.
டில்லியில், 'கோ கோ' உலக கோப்பை முதல்சீசன் சமீபத்தில் இந்திய ஆண் கள், பெண்கள் அணியினர் நுாறு சதவீத வெற்றியுடன் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக, இன்று டில்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்தித்தனர்.
இந்தியாவில் பிறந்த 'கோ கோ' விளையாட்டு, பள்ளி முதல் கல்லுாரி வரை ஆர்வமாக விளையா டப்படுகிறது. ஆசிய (2026), விளையாட்டு ஒலிம்பிக்கில் (2036) 'கோ கோ' சேர்க்கப்பட வேண்டுமென மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர் கூறுகையில், "டில்லி செங்கோட்டையில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றது வாழ்வின் பெருமைமிக்க தருணமாக கருதுகிறேன். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது,”என்றார்.
இந்திய பெண்கள் அணியின் நிர்மலா கூறுகையில் குடியரசு சுதந்திர தின கொண்டாட்டங்களை 'டிவி'யில் தான் பார்த்துள்ளேன். சிறப்பான உணர்வைதந்தது முதல் முறையாக சக வீராங்கனைகளுடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என்றார்.
0
Leave a Reply