25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


அமைச்சர் அவர்கள் ரூ.54.23 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமைச்சர் அவர்கள் ரூ.54.23 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி ஊராட்சியில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், நிறைமதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டடங்களையும்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  (22.09.2026) பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து மற்றும் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி ஊராட்சியில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான முன்பருவக் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை பராமரிப்பு வசதிகள் சிறப்பாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிறைமதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கூடுதல் வகுப்பறை வசதிகள் கிடைப்பதுடன், கல்வி கற்க ஏதுவான சிறந்த சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதேபோன்று, குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடங்களை பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டு, அவற்றை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்) திருமதி ஷீலா சுந்தரி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News