25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


அமைச்சர்  அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 277 பயனாளிகளுக்கு ரூ.24.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 277 பயனாளிகளுக்கு ரூ.24.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம்  நாரணாபுரம் ஊராட்சியில் (22.09.2026) மக்கள் தொடர்பு திட்ட முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் 277 பயனாளிகளுக்கு ரூ.24.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி வந்து தங்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தையும், நேர விரையத்தையும் பொருளாதார இழப்புகளையும் தடுக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தினை தேர்ந்தெடுத்து அதன் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தங்களுக்கு தேவையான நலத் திட்டங்களை பெற்றிடவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால்  செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்றத் திட்டங்கள் மூலம் நமது மாவட்டத்திலும் பல்வேறு தரப்பினர் பயன் பெற்று வருகின்றனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் பணிபுரிவோராக மட்டுமல்லாது தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதற்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை அறிந்து கொண்டு பெண்கள்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் 2 மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் மூலம் 73 பயனாளிகளுக்கு ரூ.15.72 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 153 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 1 பயனாளிக்கு ரூ.5,782 மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டி, 10 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.20,000 மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்மைத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.41,351 மதிப்பில் செயல் விளக்கத்திடல், நுண்ணீர் பாசன அமைத்தல், தோட்டக்கலைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.67,550 மதிப்பில் பப்பாளி பரப்பு விரிவாக்கம், தண்ணீர் பாசனம், 12 பயனாளிகளுக்கு முதலமைச்சரின்  விரிவான காப்பீடு அட்டைகள், கால்நடைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பில் புல்கரனை மற்றும் தாது உப்பு கலவை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.3.99 இலட்சம் மதிப்பில் செயற்கை கால், மின்கல சக்கர நாற்காலி, மூன்று சக்கர மிதி வண்டிகள்,  காதொலி கருவிகள், மீன் வளத்துறை மூலம் ரூ.6500 மதிப்பில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர் பதனப்பெட்டி, தாட்கோ மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கடனுதவிக்கான மானியங்கள் என மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூ.24.65 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்று ஒவ்வொரு மாதமும் ஒரு  வட்டத்தில் உள்ள ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும். எனவே இந்த முகாம்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.    

          முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள்  பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.பிரம்ம நாயகம்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம்,  தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், தாட்கோ மேலாளர் திருமதி இந்திரா காந்தி, சிவகாசி வட்டாட்சியர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News