25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தினை அமைச்சர்  அவர்கள் 1,23,480 மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தினை அமைச்சர் அவர்கள் 1,23,480 மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

 பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தினை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் 1,23,480 மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில்(22.09.2026) தொடங்கி வைத்தார்.தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியினை வழங்கிட வேண்டும் என்பதற்காகவும், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி பசியின்றி அனைவரும் பள்ளிக்கு வருவதனை உறுதி செய்திடும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை மேம்படுத்தி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கிடும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் செயல்படுத்திட  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 15.30 இலட்சம் மாணவ, மாணவியர்கள் கூடுதலாக பயன் பெறவுள்ளார்கள்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 1,200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 69,333 மாணவர்கள் ஏற்கெனவே பயன்பெற்று வந்த நிலையில் தற்போது விரிவாக்கத்தின் மூலம் 485 பள்ளிகளைச் சேர்ந்த 54,147 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,685 பள்ளிகளைச் சேர்ந்த 1,23,480 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள்.

இதன் மூலம் எதிர்கால சமூகமான இளைஞர்கள் நல்ல கல்வி அறிவுடனும், சிறந்த சுகாதாரத்துடனும் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்I A S., சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் திரு.இலக்குவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News