25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு அடிப்படை வசதிகளின்றி திறக்கப்பட்டதால் பயணிகள் அவதி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு அடிப்படை வசதிகளின்றி திறக்கப்பட்டதால் பயணிகள் அவதி.

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3 கோடி40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மே29ல் திறக்கப்பட்டு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல் லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.2 ஆண்டுகளைக் கடந்து மே29ல் திறக்கப்பட்டது. இதில்23 கடைகள்,2 ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு அறை, போலீஸ் அவுட்போஸ்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.இந்நிலையில் தினமும்50க்கும் அதிகமான டவுன் பஸ்கள், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பிற்கு போலீஸ் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள், பஸ் டிரைவர்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர்.

பயணிகள் கூறுகை யில், இரண்டு ஆண்டுகள் காத்திருந்து விட்டோம். தற்போது எந்த வசதியும் செயல்படுத்தாமல் அவசர கதியில் திறந்திருப்பது யாரை திருப்திபடுத்த என தெரியவில்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகள் கழிப்பறை இல்லாமல் படும் சிரமத்தை அதிகாரிகள் எப்போது சரி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News