அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டியில் பகுதி நேர நியாய விலை கடையினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டியில் (20.07.2024) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, இன்று புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இக்கடையின் மூலம் 697 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் திரு.செந்தில்வேல், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சசிகலா பொன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply