25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக, இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படும் பணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக, இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படும் பணி.

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (10.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு. அரவிந்த் மீனா, I A S.,., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு. ரஞ்சித் குமார் லால்,I A S,. அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S.,., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1, நிலை -2, நிலை -3 அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில்(Randomization) சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

          தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் -23 ந்தேதி நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2001 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3 என மொத்தம் 9604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

          இதில் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1,292 அலுவலர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1,480 அலுவலர்களும், 204-சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1,396 அலுவலர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1,392 அலுவலர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1,348 அலுவலர்களும், 207-அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1,296 அலுவலர்களும், 208-திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1,400 அலுவலர்களும் என மொத்தம் 7  சட்டமன்ற தொகுதிளில்  2,001 வாக்குச்சாவடி மையங்களில் 9,604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News