25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர்  அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர்  திருமதி ஆர்.லில்லி I A S., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (22.10.2026)  குத்து விளக்கேற்றி முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு விருதுநகர் சரக கைத்தறி துறையால் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை மற்றும் மத்திய அரசு ஜவுளித்துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் மூலமாக மாநில கைத்தறிக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்/அமைப்புகள் பங்கு பெற்றுள்ளன.இங்கு 60 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ரூ.4.00 கோடி அளவிலான கைத்தறித் துணி இரகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் ரூ.1.50 கோடி அளவிலான விற்பனை இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கண்காட்சியில், உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அசல் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன், நெகமம் காட்டன் மற்றும் மென்பட்டு சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், ஈரோடு மற்றும் கரூர் பெட்சீட்டுகள், ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், ஸ்கிரீன் துணிகள், மதுரை சுங்குடி காட்டன் புடவைகள், குறிஞ்சிப்பாடி லுங்கிகள், நாகர்கோவில் வடசேரி கைத்தறி வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள் போன்ற ஏராளமான இரகங்களுடன் அழகிய காஷ்மீர் சால்வைகள், ஆந்திரா மங்களகிரி சேலைகள், உத்திரகாண்ட் சில்க் புடவைகள், ஹரியானா பெட்ஷீட்கள், மணிப்பூர் சேலைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களால் தயார் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பருத்தி இரகங்களுக்கு 30% (அதிகபட்சம் ரூ.150/- வரை), பட்டு இரகங்களுக்கு ரூ.300/-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சியானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கத்தில் 22.10.2026 முதல் 05.11.2026 முடிய 14 நாட்கள் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பொது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் நெசவாளர்களின் தொழில்களைப் பாதுகாத்திடவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிடவும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில் விருதுநகர் சரக உதவி இயக்குநர் திரு.வே.சேரன் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News