25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நோயின்றி வாழ.. ஜலதீஸ்வரர் கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோயின்றி வாழ.. ஜலதீஸ்வரர் கோயில்.

ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்டசாலா என்ற ஊரில் ஜலதீஸ்வரர் கோயில் உள்ளது, வரம் தரும் இவரை தரிசித்தால் உடல்நலம், மனநலம் சிறக்கும். நோயாளிகள் இங்கு வந்தால் நோயின்றி வாழும் பாக்கியம் கிடைக்கும்.

சிவனுக்கும், பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடக்க இருந்தது. அதைக் காண தேவர்கள் கூடினர். இதனால் கைலாயம் உள்ள வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை தென்பகுதிக்கு செல்லுமாறு கட்டளையிட்டார் சிவன்.

காரணம் அகத்தியரின் தவசக்தியால்தான் அதை செய்ய முடியும். அங்கிருந்து கிளம்பி இவ்வூர் வழியே தென்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார் அகத்தியர். ஆனால் அவரோ சிவனின் திருமணத்தை பார்க்க முடியவில்லையே என ஏங்கினார். உடனே சிவனும்,பார்வதியும் திருமணக்கோலத்தில்

இத்தலத்தில் காட்சிகொடுத்தனர். அக்காட்சியை சிலைவடிவாக்கி ஒரே பீடத்தில் மாசிமகத்தன்று பிரதிஷ்டை  செய்தார் அகத்தியர். ஆந்திராவில் உள்ள குடிமல்லம்,

அமராவதி,திராட்சாராமம் சிவன் கோயில்களைப் போல இக்கோயிலும் 2200 ஆண்டுகள் பழமையானது. சாதவாகனர்கள், இஷ்வாகுக்கள், கிழக்கு சாளுக்கிய மன்னர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இங்கு வருவோருக்கு பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் நான்கு தூண்களை கொண்ட முன் மண்டபத்தைகாணலாம். அதைக் கடந்தால் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். அது திராவிட பாணியில் சுதை சிற்பங்களுடன் உள்ளது. அதைக் கடந்தால் கருவறையில் ஒரே பீடத்தில் பார்வதியும், லிங்க வடிவில் சிவனும் வெள்ளி கவசத்துடன் உள்ளனர். சுவாமியை 'ஜலதீஸ்வரர்' என அழைக்கின்றனர். இதற்கு காரணம் உண்டு.

சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்திற்கு மருத்துவ குணம் உள்ளது. அதை அருந்தினால் நோய்கள் குணமாகும். இங்கு ஷேத்திர பாலகர்களாக காலபைரவரும், நரசிம்மரும் உள்ளனர். அகத்தியர்,அவரது மனைவி லோபமுத்ராவுக்கு இங்கு சன்னதி உள்ளது. ஆதிசங்கரர் இங்கு தங்கி தரிசனம் செய்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News