25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பாரா ஆசிய விளையாட்டு: தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா ஆசிய விளையாட்டு: தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!

ஜப்பானின் அய்ச்சி -நகொயாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்று உள்ளனர்.

வில்வித்தை.

நேற்று வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. கலப்பு அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் 19 வயது, இரு கைகள் இல்லாத வீராங்கனை ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி களமிறங்கியது. நேற்று நடந்த பைனலில் இந்தோனேஷியாவின் ஆயுதியா, கென் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 151-148 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.

தடகளம்.

நீளம் தாண்டுதல்: பாரா ஆசிய விளையாட்டு தடகளத்தில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 44/62/64') போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜ் (32) பங்கேற்றார். இவர் இரண்டாவது வாய்ப்பில் 7.15 மீ. நீளம் தாண்டி, புதிய ஆசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

400 மீ. ஓட்டம் (ஆண்கள்): ஆண்களுக்கான 400 மீ. 'டி 47' ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய திலிப் காவிட், 48.27 வினாடியில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

400 மீ. ஓட்டம் (பெண்கள்): பெண்களுக்கான 400 மீ. 'டி 47' பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் அஞ்சனாபென் (59.97 வினாடி) தங்கம் வென்றார்.

உயரம் தாண்டுதல்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 'டி 63' பிரிவில் இந்தியா சார்பில் ஷைலேஷ் குமார், ராகுல் சரோஹா, வருண் சிங் பங்கேற்றனர். இதில் அதிகபட்சம் 1.89 மீ. உயரம் தாண்டிய ஷைலேஷ் குமார், புதிய பாரா ஆசிய சாதனை படைத்து, தங்கப் பதக்கம் வசப்படுத்தினார். வருண் சிங் (1.84 மீ.), ராகுல் சரோஹா (1.81 மீ.) அடுத்த இரு இடங்களைப் பெற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர். இப்பிரிவில் மூன்று பதக்கங்களையும் இந்தியா வசப்படுத்தியது.

வட்டு எறிதல்.

பெண்களுக்கான வட்டு எறிதல் 'எப் 54' பிரிவில் இந்தியாவின் சுவர்ணா ராஜ் பங்கேற்றார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 15.66 மீ. தூரம் எறிந்து, தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார்.

பாட்மின்டனில் 7 வெண்கலம்.

பாட்மின்டனில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ('எஸ்.யு.5') அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ் (தமிழகம்) 21-19, 15–21, 13-21 என சக தமிழக வீராங்கனை துளசிமதியிடம் தோற்று, வெண்கலப் பதக்கம் பெற்றார். கலப்பு இரட்டையர் அரையிறுதியில் மணிஷா, பிரமோத் பகத் ஜோடி ('எஸ்.எல்.3, எஸ்.யு.5') 21-16, 13-21, 17-21 என இந்தோனேஷிய ஜோடியிடம் போராடி தோற்று, வெண்கலம் வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News