25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய, மாநில பணியாளர் தேர்வணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2026 முதல் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுவாணையம்(TNPSC),தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், இந்த அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும்  வை-பை (Wifi) வசதியுடன் கூடிய கணினி ஆய்வகமும் உள்ளது.

இரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட  ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய உதவி லோகோ பைலட் (RRB ALP(Assistant Logo Pilot) தேர்வுக்கான இலவச வகுப்பு 08.07.2026 (புதன் கிழமை) முதல் விருதுநகர்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இலவசப் பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இலவசப் பாடக்குறிப்புகள் வழங்கி பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகளும் நடைபெறவுள்ளது.

இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/rzTqHEiU8yigdCGp6 என்ற இணைப்பு (Google Link) மூலமாகவோ அல்லது  studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.எனவே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய உதவி லோகோ பைலட் RRB ALP(Assistant Logo Pailet) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News