திருவில்லிபுத்தூர்; நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (08.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் நகராட்சி மஜீத் நகர் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.75 கோடி மதிப்பீட்டில்; கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தையும்,திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட மருத்துவர் காலனி FSTP வளாகத்தில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், ரூ.42.50 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திருவில்லிபுத்தூர் ஆணையாளர் திரு.ராஜமாணிக்கம், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
0
Leave a Reply