டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் இன்று மோதல்.
10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் முதல் கட்டத்தில் 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இதன் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கோவை கிங்ஸ் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.
இறுதிப்போட்டி உள்பட தொடரின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. லீக், பிளே-ஆப் மற்றும் இறுதிச்சுற்று என மொத்தம் 12 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு முனைப்பு காட்டும் என்பதால், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
Leave a Reply