Trade Apprenticeship Engagement Fair (TAEF) 28.01.2025 அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது
திருநெல்வேலி மண்டல அளவிலான, Trade Apprenticeship Engagement Fair (TAEF) 28.01.2025 செவ்வாய்கிழமை அன்று அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.
1. மத்திய அரசு தொழிற்நிறுவனங்கள்
2. மாநில அரசு தொழிற்நிறுவனங்கள்
3. முன்னணி தனியார் தொழிற் நிறுவனங்கள்
மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் அரசுஃதனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளான 1.Fitter 2) Machinist 3) MMV 4) Refrigeration Air Condition Technician 5)Electrician 6)Turner 7)Welder 8)Wireman 9)Surveyor 10) ஊழிய மற்றும் இதர பிரிவு தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இந்நாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சியில் பயிற்சி பெறாதவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8000/-முதல் ரூ.15000/- வரை தொழிற்நிறுவன தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது.மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate –NAC) மற்றும் முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படுகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயிற்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply