ராஜபாளையம் மூன்றாவது பிளாட்பார்மில் அமைந்துள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை முதல் பிளாட்பார்மில் மாற்ற வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.
ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காகராஜபாளையம் மூன்றாவது பிளாட்பார்மில் அமைந்துள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை முதல் பிளாட்பார்மில் மாற்ற வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள்ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வருகிறது. நுழைவு பாதைக்கு மாற்றாக வடக்கு பகுதியில், அகலமான நுழைவாயில் வாகன நிறுத்தம் பழைய நடைமேடையில் லிப்ட் பணிகள் முடிந்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளான திருட்டு, ஆட்கள் பொருட்களை தவறவிடுதல், விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். ஆனால் மூன்றாவது பிளாட்பார்மில் உள்ள பழைய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாததால் புகார்கள் விடுபடுகின்றன.
போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் எழுந்துள்ளது .அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டிட பணி நடந்து வரும் நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்வதற்காக முதல் பிளாட்பார்மில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply