தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர், அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு பரிந்துரை செய்த வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர்/ அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் திரு.க.அசோகன், திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜு, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.துரை.சந்திரசேகரன், திரு.ம.சிந்தனை செல்வன், திரு.வி.பி.நாகைமாலி, திரு.த.வேலு, முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் (22.10.2024) பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதன்படி, விருதுநகரில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும், அரசு கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு, விடுதி அறைகள், குடிநீர், மழைநீர் சேகரிப்பு தொட்டி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.விடுதி கட்டடமானது ஏறக்குறைய 50 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டுள்ளதாலும், இதில் மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால், புதிய கட்டடம் சுமார் 1.50 கோடி மதிப்பில் கட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்கிறது என கூறினார்கள்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு, அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, அங்கிருந்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது விநியோக அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்கள்.
பின்னர், சாத்தூர் வட்டம், அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தினை பார்வையிட்டு, அது செயல்படும் விதம், உற்பத்தி திறன், உற்பத்தியில் அரசுக்கு வழங்கப்படும் மின் அளவு மற்றும் கட்டணத்தொகை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.சாத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு, அங்குள்ள பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பார்வையிட்டு, கட்டடத்தின் தரம், கட்டடத்தின் உறுதி தன்மை, குடிநீர் மற்றும் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் இணைச் செயலாளர் திருமதி பி.தேன்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.கார்த்திகாயினி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர்(பொது) திருமதி.மாலதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் திரு.திருநாவுக்கரசு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply