பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் பயிர் செய்யவுள்ள விவசாயிகள் அனைவரும் பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) ராபி 2024-25 பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்துள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாகவும் பயிர்களை காப்பீடு செய்து கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இணையதள இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு விவசாயிகள் தாங்கள் பயிர் காப்பீடு செய்ததற்கான இணையதள ரசீதினைப் பெறும்பொழுது தாங்கள் பயிரிட்டுள்ள பயிரின் பெயர், பயிர் செய்துள்ள கிராமம் மற்றும் தங்களது வங்கிக் கணக்கு பற்றிய விபரங்கள் ஆகியவை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு சரிபார்க்கும்பொழுது தங்களது விண்ணப்பங்களில் குறைகள் ஏதுமிருப்பின் உடனே அதை இரத்து செய்து புதிய விண்ணப்பித்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் பயிர் காப்பீடு இழப்பீடு வரும்பொழுது தவறான தங்கள் விண்ணப்ப பதிவினால் விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply