வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல்
தேவையான பொருட்கள்-1கப் வரகு அரிசி,1கப் பாசிப்பருப்பு,2ஸ்பூன் பட்டர்,உப்பு சுவைக்கேற்ப ,2 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்மிளகு,2 கொத்து கருவேப்பிலை,நெய்,1டம்ளர் பால்.
செய்முறை.
வரகு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி1/2மணி நேரம் ஊற விடவும்.பின்னர் குக்கரில் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் சீரகம், பட்டர், இஞ்சி சேர்த்து அதனுடன்1பங்கு அரிசிக்கு3பங்கு தண்ணீர் சேர்த்து4விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.பின்னர் பால், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்(பால் சேர்ப்பதால் பொங்கல் ஆறிய உடனும் கெட்டி படாமல் இலகுவாக இருக்கும்).பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும். செம டேஸ்டி ஹெல்த்தி பொங்கல் தயார்.
0
Leave a Reply