நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (12.08.2024) நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் நுண்ணூட்டசத்து, விதைநேர்த்தி உயிர் உரங்கள், ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள், பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் கடனுதவிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.
அதன்படி, 200 விவசாயிகளுக்கு குதிரைவாலி விதை மற்றும் நுண்ணூட்டசத்து, விதைநேர்த்தி உயிர் உரங்களையும்,
நபார்டு நீர்வடிப்பகுதி திட்டம் மூலம் ஊராட்சிகளுக்கு வரத்துக் கால்வாய் மற்றும் பொது இடங்களில் நடுவதற்கு வன மரக்கன்றுகளையும்,வடக்குபுளியம்பட்டி நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.10 இலட்சம் மதிப்பில் கறவைமாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்புக்கான கடனுதவிகளையும்,பிள்ளையார் தொட்டியாங்குளம் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் தையல் கடை மற்றும் வெள்ளாடு வளர்ப்புக்கான கடனுதவிகளையும்,எழுவாணி நபார்டு நீர்வடிப்பகுதி நெல் பயிர் விவசாயிகள் பயன் பெறும் வகையில் 2 பயனாளிகளுக்கு வரிசை நெல் நடவு இயந்திரங்களையும்,எருமைக்குளம் நபார்டு நீர்வடிப்பகுதி சார்பாக எழுவாணி பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் நிதியுதவியினையும்,SEEDS – Syncom Agri Tech Ltd சார்பில் காரியாபட்டி, திருச்சுழி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் 368 விவசாயிகளின் நிலத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் சாகுபடி செய்யும் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply