வேளாண்மை துறையின் மூலம் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் மற்றும் காரீப் பருவ கால பயிற்சி வகுப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் செந்நிலைக்குடி கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து நடத்திய கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் மற்றும் காரீப் பருவ கால பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (25.06.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இயந்திரமாக்கல் திட்டத்தின்கீழ், ரூ.42,000/- மானியத்தில் ரொட்டவேட்டர் இயந்திரத்தையும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 12.5 கிலோ நெல் நுண்ணூட்ட உரமும், 50 சதவீத மானியத்தில் உயிர் உரம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கரைசலும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திம் நெல்லுக்குப்பின் பயறு என்ற இனத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 20 கிலோ பாசிப்பயறுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.வேளாண்மைத்துறையில் உள்ள தொழில்நுட்பங்கள், உற்பத்தியில் இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்தும், அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது, விவசாயிகள் காய்கறி விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக சொல்கிறார்கள். அதற்கும் அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. பந்தல் அமைப்பதற்கான மானியங்கள் அரசு வழங்குகிறது. இது போன்ற என்னென்ன மானியங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எல்லோரிடமும் எடுத்துக்கூற வேண்டும்.நமது மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை எல்லா காலகட்டத்திலும் லாபகரமாக செய்ய முடியாது. அது காலநிலையை பொருத்து மாறிக்கொண்டே இருக்கும். அதனால் இது போன்ற தொழில்நுட்பங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும்.அதற்கு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அரசின் திட்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.விவசாய துறை வல்லுநர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply