25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய-சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய-சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக. விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.  இக்கண்காட்சியை பொதுமக்கள், அனைத்து கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கண்டுகளிக்கலாம்.

 இக்கண்காட்சியில் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஓவிய சிற்பக் நுண்கலைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பினால்                ஏ4 தாள் அளவில் தங்களின் படைப்புகளின் போட்டோ அல்லது ஒளிஅச்சு நகலினை (Photo Copy) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, திருநெல்வேலி -07. தொலைபேசி எண்.0462-2901890 என்ற முகவரிக்கு 05.07.2026 தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

 தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களின் ஐந்து படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.  அதில் சிறந்த படைப்புகளை தெரிவு செய்து,  தலா 7 கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மூன்றாம் பரிசாக ரூ.2,000/- காசோலையாக வழங்கப்படும்

  மேலும், சிற்பக்கலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐம்பது ஒவிய சிற்பக் கலைஞர்களுக்கு மேற்கண்ட மூன்று நாட்களில் கலை பயிற்சி பட்டறையும் நடைபெறும். இக்கண்காட்சியில் படைப்புகளை காட்சிபடுத்தும் கலைஞர்களுக்கும் பயிற்சி பட்டறையில் பங்கு கொள்ளும் கலைஞர்களுக்கும், சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News