தொப்புள் குடலிறக்கம் என்றால் என்ன?
தொப்புள் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமடையும்போது, சிறுகுடலின் ஒரு பகுதி வெளிப்புறமாக புடைத்துக் காணப்படும் நிலையே தொப்புள் குடலிறக்கம் (Umbilical Hernia). இது பொதுவாக பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள், பல முறை பிரசவமானவர்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அதிகமாக ஏற்படலாம்.
ஆரம்ப நிலையில் பெரிதாக வலி இருக்காது. ஆனால் நிற்கும்போது, இருமும்போது அல்லது அதிக அழுத்தம் கொடுக்கும்போது புடைப்பு தெளிவாகத் தெரியும். படுத்துக்கொண்டால் அது குறைந்து காணப்படும்.
இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் நீடித்த இருமலுக்கு சிகிச்சை பெறவும் வேண்டும். வயிற்றுப் பகுதியை அல்ட்ராசவுண்ட் மூலம் பரிசோதித்து உறுதி செய்யலாம்.
காலப்போக்கில் குடலிறக்கம் பெரிதாகலாம். குடல் சிக்கிக் கொண்டால் திடீர் கடுமையான வலி ஏற்படும். அப்படிப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
0
Leave a Reply