25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும்; (ஆண் / பெண்) இருபாலரும் 15.07.2024 அன்று வரை நேரடியாகவோ அல்லது இணையதளம்  மூலமாகவோ  விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும்; (ஆண் / பெண்) இருபாலரும் 15.07.2024 அன்று வரை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/திருச்சுழி 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் 13.06.2024 முடிய வரவேற்கப்பட்டது. தற்போது 01.07.2024 முதல் 15.07.2024 முடிய நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 15.07.2024 முடிய நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளின் விபரம் பொருத்துநர் (Fitter),  கடைசலர் (Turner),  இயந்திர வேலையாள் (Machinist),  கம்மியர் மோட்டார் வண்டி (MMV) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician) உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration) மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். (உயரம் 165cm, எடை 52 kg, மார்பு விரிவதற்கு முன் 81cm பின் 85cm ).  மற்றும்  வுயவய  Tata  Technology மூலம் 4.0-வில் துவங்கியிருக்கும் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகளின் விபரம் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle),  (Industrial Robotics & Digital Manufacturing) அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண் பயிற்சியாளர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 /- உதவித்தொகை.  
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர்/திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர Online மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் /சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம்.
       மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154 / 70100-40810 ஆகிய  தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News