அருப்புக்கோட்டை நகரில் வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது
நமது தமிழ்நாடு அரசானது பொதுமக்களின் நலன் கருதி பொது மக்கள் தங்களது நில ஆவணங்களை எளிதில் எங்கிருந்தும் உடனடியாக பெற்றுக்கொள்ள ஏதுவாக ஆன்லைன் பட்டா திட்டம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது நமது அருப்புக்கோட்டை நகரில் நகர நில அளவைக்குட்பட்ட வார்டு ‘E” பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நிலஅளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின்தொடர்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் தங்கள் கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டு மனைகளுக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாகவிஸ்தி பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும், கிரையம் பெற்றது முதற்கொண்டு நாளது தேதி வரை பட்டாமாற்றம் செய்யாமல் இருப்பின், பட்டா பெறவும், தங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களின் நகல்களுடன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவணத்தின் நகல்
2. வில்லங்கச்சான்று (EC)
3. ஆதார் அட்டை நகல்
4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
5. இறப்பு மற்றும் வாரிசு சான்று (இறந்தவரின் பெயரில் பட்டா இருக்கும் நேர்வுகளில்)
0
Leave a Reply